முதல்வர் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை…! தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க திட்டம்…?

0
52

கொரோனா நோய் தொற்று காரணமாக போடப்பட்டிருக்கும் ஊரடங்கு இதுவரை தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்திருக்கின்றது அந்த வகையில் இந்த ஊரடங்கில் மேற்கொண்டு என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி அன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர்.

எதிர்வரும் 28 ஆம் தேதி அன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடனும் அன்று மாலை மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தவிருக்கின்றார் தமிழக முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரையரங்குகளின் திறப்பு சம்பந்தமாகவும் சென்னை புறநகர் ரயில்சேவை உள்பட பல விஷயங்கள் சம்பந்தமாக ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது இம்மாதம் 31ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையிலே முதல்வர் இந்த ஆலோசனையை மேற்கொள்ளவிருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்த ஊரடங்கானது அமலில் இருந்து வருகின்றது இந்த ஊரடங்கு ஒவ்வொரு முறை நீட்டிக்கப்படும் போதும் தொடர்ச்சியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது பொதுப் போக்குவரத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் கடைகள் கோயில்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றது இருந்தாலும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்றவை இன்னும் திறக்கப்படவில்லை ஆகவே இருபத்தி எட்டாம் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இன்னும் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.