மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

0
62
The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!
The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

துருக்கி நாட்டில் உள்ள புர்ஷா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் புட்லு. 50 வயதான இவர்  தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள ஒரு காட்டிற்குள் சென்று மது அருந்தினார். மது போதையின் காரணமாக அவர்களைப் பிரிந்து காட்டிற்குள் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் காரணமாக தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை  என அவரது மனைவி போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு ஒரு மீட்புக்குழுவினர் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு நபர் நானும் உங்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுகிறேன் என கூறி இணைந்தார். மீட்புக்குழுவினர் தன்னை தான் தேடுகிறார்கள் என்பது தெரியாமலேயே அவர்களுடன் சேர்ந்து தன்னை தானே தேடி வந்திருக்கிறார்.

அதன்பிறகு சில மணி நேரம் கழித்துத்தான் அதிகாரிகள் தன்னை தேடுகிறார்கள் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். அதன் காரணமாக அவர் சந்தேகப்படும் விதத்தில் நடந்து கொண்டார். அவரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீட்பு குழுவினர்  அவர் பெயரை சொல்லி அழைத்துள்ளனர். அப்போது நான் தான் அது. நான் இங்குதான் இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் எனக்கு கடுமையான தண்டனை எல்லாம் கொடுத்து விடாதீர்கள் என்றும்  எனது தந்தை என்னை கொன்று விடுவார் என்றும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். மீட்புக் குழுவினரயே இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபருக்கு அதிகாரிகள் ஏதேனும் தண்டனை கொடுத்தார்களா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.