தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!

0
132

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!

அந்த ராகுல் காந்தி இப்பொழுது இல்லை என்று ஹரியானாவில் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கூறியிருந்த வார்த்தைகள் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.

ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை நடை யாத்திரை டில்லி, உத்திரப்பிரதேசம், மாநிலங்களை தொடர்ந்து ஹரியானாவில் நுழைந்து இன்று பஞ்சாபில் தொடங்குகிறது.

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஒற்றுமை பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியின் பேச்சு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த ஒற்றுமை பயணத்தால் உங்களின் மாறி உள்ளதா? அதாவது இந்த யாத்திரை உங்கள் அடையாளத்தை மாற்றியுள்ளதா?  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராகுல் உங்கள் மனதில் எந்த மாதிரியான ராகுல் காந்தி அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாரோ அவரை நான் கொலை செய்து விட்டேன். தற்போது அவர் உயிருடன் இல்லை. அந்த ராகுல் என் மனதில் இல்லை அவர் மறைந்து விட்டார். இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் காந்தி இல்லை. இது உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் நீங்கள் இந்து தர்மத்தை சற்று படிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு புரியும்.  கடவுள் சிவபெருமானை பற்றி படியுங்கள்.

நான் என் மனதில் எந்த அடையாளமாகவும் இல்லை. எனக்கென்று ஒரு பிம்பம் என் புத்தியில் இல்லை. நான் பாஜகவினரின் மனதில் இருக்கிறேன். எனக்கென்று என்ன பிம்பம் இருக்கிறது என்பது பற்றி கவலை இல்லை. உங்களுக்கு என்னை பற்றி எப்படி உருவகப்படுத்த முடியுமோ! அப்படி உருவகப்படுத்திக் கொள்ளலாம். எனக்கு கவலை இல்லை. நான் செய்ய வேண்டிய எனது பணியை மட்டும் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

ராகுல் காந்தியின் இத்தகைய ஒற்றுமை யாத்திரை மக்களிடையே அபிமானம் பெற்று வரும் நிலையில் அவரின் பேச்சு சற்று குழப்பம் நிறைந்துள்ளதாக சிலர் கருதுகின்றனர்.