Breaking News
79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்!

79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்!
சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி பழங்குடி மக்கள் போராட்டம்.
கொலம்பியாவில் சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களையும், 79 காவலர்களையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
கொலம்பியா நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகளையும், பள்ளிகளையும் மேம்படுத்தி தருமாறு அங்குள்ள எண்ணெய் ஆலைகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்து போராடின.
சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு செல்லும் வழியில், காவலர்களுடன் சேர்ந்து பழங்குடி மக்களும் மறியலில் ஈடுபட்டு வந்தன.
போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் வன்முறை வெடித்தது.
பாராட்டத்தின்போது கலவரம் கை மீறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவி, போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 9 பேரையும், 79 போலீசாரையும் பணய கைதியாக அப்பகுதி மக்கள் பிடித்து வைத்துள்ளனர்
Continue Reading