முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி! சசிகலா பக்கம் செல்கிறதா?

0
92

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.அதே நேரத்தில் சசிகலா முழுமையாக குணம் பெற்று திரும்ப வேண்டும். சசிகலா மறுபடியும் அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும். நானும் ஒரு பெண் தான் என்ற முறையில் சசிகலாவிற்கு என்னுடைய ஆதரவானது எப்பொழுதும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தோளோடு தோளாக நின்று அனைத்தையும் செய்து முடித்தவர் சசிகலா எனவும், எடப்பாடி பழனிச்சாமி மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் அந்த நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அதோடு சுமார் 100 தினங்களில் மக்களுடைய பிரச்சினை எல்லாம் காணாமல் போகும் என்று தெரிவித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அவருடைய கட்சியான திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் ஏதாவது செய்தாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆகவே வாக்குறுதி என்பதை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அதை அனைவராலும் நிறைவேற்ற இயலாது என்று பேசியிருக்கிறார்.

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரிய வந்துவிடும் அதிமுக கூட்டணியில் இதற்கு முன்னர் எங்களுக்கு அளிக்கப்பட்ட ௪௧ தொகுதிகளை இந்த தேர்தலிலும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம் என்று அடிக்கடி தெரிவிக்கும் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவர் மக்களால் முதல்வராகப் பதவி ஏற்கவில்லை ,சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் அந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார் என்று பேசியிருப்பது முதல்வருக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதோடு அவர் சசிகலாவை பாராட்டி பேசியிருப்பது அவர் வருங்காலத்தில் சசிகலா தரப்பிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்பதை மேற்கோள் காட்டுவதற்காகத்தான் என்று தெரிவிக்கிறார்கள்.