உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?..

0
86
The patient is fighting for his life!! The ambulant who refused to open the door? Is it a trick of fate?..
The patient is fighting for his life!! The ambulant who refused to open the door? Is it a trick of fate?..

உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?..

கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த தான் கோயமோன் என்பவர்.இவர் தினமும் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவார்.இந்நிலையில் சம்பவதென்று பணிக்கு சென்று கொண்டிருந்த கோயமோன்எதிரே வந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் மோதி தூக்கி வீசப்பட்டார்.

இதனைதொடர்ந்து சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கோயமோனை பார்த்த மக்கள் விரைவு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்தனர்.பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து அவசரமாக கோயமோனை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சித்த போது ஆம்புலன்சின் கதவைத் திறக்க முடியாமல் போனது.இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை உடைத்து திறந்தனர்.பின்னர் கோயமோன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிகிச்சைக்கு கால தாமதம் ஆனதால் கோயமோன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் அமைந்துள்ள  மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K