அல்கொய்தா தலைவரை கொல்ல அமெரிக்காவுக்கு உதவி புரிந்த பாகிஸ்தான்! உண்மையான காரணம் இதுதான்!

0
54

அமெரிக்காவின் ஆளில்லாத விமான மூலமாக கொல்லப்பட்ட அல்ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபுல் புறநகர் பகுதியில் இருக்கின்ற வீட்டில் பதுங்கி இருந்தார் என சொல்லப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாத அமைப்பிடமிருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்றுவதற்காக பல வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவினடிப்படையில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அந்த நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறினர்.

இந்த சூழ்நிலையில் தான் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த விதமான பங்களிப்பும் இல்லாத ஒரு நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல்ஜவாஹிரி கொல்லப்பட்டிருக்கிறார்.

இதன் காரணமாக, ஆளில்லாத விமானத்தை எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது? என்று கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது, அதாவது பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொண்டு தான் ஆளில்லாத விமானம் அமெரிக்கா மூலமாக இயக்கப்பட்டதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் பாகிஸ்தான் மாந்திரி மூலமாக சென்றதாகவும் தங்களுடைய நாட்டு வானொலியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அல்ஜவாஹிரியை கொல்வதற்கு அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் உதவி புரிந்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அல்ஜவாஹிரி பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்சமயம் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது அதிலிருந்து மீண்டு வருவதற்காகத்தான் பல நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிதியை பெற முயற்சி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தான் அமெரிக்காவிற்கு இந்த விஷயத்தில் பாகிஸ்தான் உதவி புரிந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அல்ஜவாஹிரியின் நடமாட்டம் போன்ற தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை கேட்டுக் கொண்டதாகவும், இதனடிப்படையில் அமெரிக்காவிடம் நற்பெயர் எடுத்து விடலாம் என்ற காரணத்தை முன்வைத்து தான் பாகிஸ்தான் இந்த விஷயத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அல்ஜவாஹிரியின் நடமாட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தகவல் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து சில நிபுணர்கள் தெரிவிக்கும்போது அமெரிக்காவிடம் நட்புறவை பெறுவதற்காகவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடமிருந்து நிதி உதவியை பெறுவதற்காகவும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி புரிந்திருக்கிறது என்று தெரிவித்து வருகிறார்கள்.