Connect with us

Breaking News

ஈரோடு மாவட்டத்தில் 65  வயது  மூதாட்டி வாலிபர்களுக்கு செய்த காரியம்! பட்டப்பகலிலே  கையும் களவுமாக மாட்டிய சம்பவம்!

Published

on

ஈரோடு மாவட்டத்தில் 65  வயது  மூதாட்டி வாலிபர்களுக்கு செய்த காரியம்! பட்டப்பகலிலே  கையும் களவுமாக மாட்டிய சம்பவம்!

ஈரோடு மாவட்டம் சத்யா நகர் மற்றும் பிபி அக்கரகாரம் போன்ற பகுதியில் நேற்று கருங்கல்பாளையம் போலீஸ் சப்வின் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (65). என்ற மூதாட்டி நின்று கொண்டிருந்தார். அந்த மூதாட்டியின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையில்  ஈடுபட்டனர்.

Advertisement

மேலும் அந்த விசாரணையில் அவரிடம் 10 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அதனை  பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியில் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (30) மற்றும் விஜய் (26). ஆகிய இருவரும் சந்தேகம் படியாக சுற்றித்திரிந்ததால் போலீசார் அவர்களை மடக்கிபிடித்து சோதனை செய்தனர் அப்போது அவர்களிடமிருந்து 44 மதுபாட்டில்கள் பறிமுதல்  செய்யப்பட்டது.

மேலும் இதே போல் ஈரோடு எஸ் கே சி ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதி சேர்ந்த உத்தமன் (44) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். ஈரோடு பகுதியில் தொடர்ந்து மதுபாட்டல் விற்கப்படுவது குறித்து போலீசார் எச்சரிக்கைவிடுத்த வருகின்றனர். இந்த எச்சரிக்கையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement