அதிர்ச்சி! இந்தியாவில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு!

0
47

தென் ஆப்பிரிக்காவில் சென்ற மாதம் 24 ஆம் தேதி முதல் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவியது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி இந்த நோய் தொற்று காலடி எடுத்து வைத்தது இந்த தொற்று கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தது. 27 நாளில் மராட்டியம்,புதுடில்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், ஹரியாணா, சண்டீகர், காஷ்மீர், உத்தரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம், லடாக், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறது.

நேற்று வரையில் இந்த நோய்த்தொற்று 600 பேருக்கு மேல் பாதித்திருந்தது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் நேற்று இந்த புதிய வகை நோய் தொற்று நுழைந்திருக்கிறது. அங்கு 80 வயது முதியவர், 20 வயது இளைஞர், என்று இரண்டு பேருக்கு இந்தநோய் தொற்று பாதித்திருக்கிறது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 34 பேரை இந்த நோய் தொற்று பாதிப்பு இந்த சூழ்நிலையில், நேற்று மேலும் 11 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், நாட்டில் இந்த புதிய வகை நோய் தொற்றுக்கு ஆளாகி ஊரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்சமயம் 781 ஆக அதிகரித்திருக்கிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 நபர்களுக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேருக்கும், இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இது நிலையில், குஜராத் மாநிலத்தில் 33 பேருக்கும், கேரளாவில் 65 பேருக்கும், தெலுங்கானாவில் 65 பேருக்கும் ராஜஸ்தானில் 46 பேருக்கும் கர்நாடக மாநிலத்தில் 34 பேருக்கும், தமிழகத்தில் 45 பேருக்கும், ஹரியானா மாநிலத்தில் 12 பேருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தில் 11 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும், ஆந்திர மாநிலத்தில் 6 பேருக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 பேருக்கும், சண்டிகரில் 3 பேருக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 பேருக்கும், உத்திரப்பிரதேசத்தில் 2 பேருக்கும், கோவா மாநிலத்தில் ஒருவருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும், மணிப்பூரில் ஒருவருக்கும், பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு தலைநகர் டெல்லியில் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 238 பேரில் இதுவரையில் 57 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் இதுவரையில் 72 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.