இந்தியாவில் இரட்டிப்பானது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை!

0
60

இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இணையமானது பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2016ஆம் ஆண்டு இணைய இணைப்புகளின் கணக்கு விபரம் 34 கோடி இணைப்புகள் ஆகும். இந்த 4 ஆண்டு காலத்தில், இணைய இணைப்புகளானது இரட்டிப்பு அடைந்துள்ளது என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்த இரட்டிப்பு எண்ணிக்கையை அடைவதற்கு காரணம் என்னவென்றால் 2015 ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதால் இருக்கலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா ஆகிய முக்கிய மாநிலத்தின் இணைய  இணைப்புகளின் எண்ணிக்கை சதவீதத்தில், இந்த மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து 35 விழுக்காடு பெற்றுள்ளது. அத்துடன் இணைய  இணைப்புகளின் எண்ணிக்கை 76 கோடியாக உயர்ந்தாலும், இணையத்தை அணுகுபவர்களின்  எண்ணிக்கை 45.7 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

author avatar
Parthipan K