நீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா!!

0
148
#image_title

நீலகிரி கோடை விழா நிறைவு பெற்றது! வருமானம் மட்டும் இவ்வளவு கோடியா!

நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் கோடை விழாவில் கிடைத்த வருவாய் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா நடைபெறுகின்றது.

அதன்படி இந்த ஆண்டு மே 6ம் தேதி கோடை விழா கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தெடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் 18வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டும் தாவரவியல் பூங்காவிற்கு 1.50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், ரோஜா மலர் கண்காட்சியை காண 50000 சுற்றுலா பயணிகளும், பழக் கண்காட்சியை காண சுமார் 25000 சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்துள்ளனர்.

இது தொடர்பாக தோட்டக்கலைதுறை அதிகாரிகள் “இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சராசரியாக 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலமாக தோட்டக்கலைத் துறைக்கு 6.20 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வருவாயுடன் ஒப்பிடும் பொழுது இந்தாண்டு 1.20 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது” என்று கூறினர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த கோடை விழா நோற்றுடன் நிறைவு பெற்றது.