சாங் இ-5 விண்கலம் குறித்து சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த நடவடிக்கை!

0
111

சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் (China National Space Administration),சாங் இ-5 ( chang’e-5 ) என்ற விண்கலத்தை நிலவில் தரை இறக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்த விண்கலத்தை கடந்த மாதம் 23ஆம் தேதியன்று நிலவிற்கு செலுத்தியுள்ளது சீனா. அதாவது நிலவு குறித்த அனைத்து தகவல்களை பெறும் ஆராய்ச்சிக்காக, இந்த விண்கலம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

இந்த சாங் இ-5 விண்கலம் சனிக்கிழமை அன்று நிலவின் வட்டப் பாதைக்குள் ( SpaceCraft Entered Orbit Around the Moon ) நுழைந்துள்ளது. சாங் இ-5 என்கின்ற இந்த விண்கலத்தை நிலவில் தரை இறங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை சீனா மேற்கொண்டு வருகிறது. 

அது என்னவென்றால், இந்த சாங் இ-5 விண்கலத்தில் இருக்கும் லேண்டர்-அசென்டர் சாதனத்தையும் மற்றும் அதன் ஆர்பிடர்-சேம்பிள் ரிட்டர்ன் வாகனத்தையும் தனித்தனியே பிரிப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு வருகிறது சீனா. தற்போது இவர்கள் எடுத்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. 

இன்று காலை 4.40 மணி அளவில் சீனா எடுத்த முயற்சி வெற்றி பெற்றது.  இதைத்தொடர்ந்து சரியான நேரத்தில் லேண்டர்-அசென்டரை தரையிறக்கி, அத்துடன் மாதிரிகளை அதாவது Rock Samples ஐ எடுத்து வருவதற்கான முயற்சியில் சீனா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Parthipan K