அடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 

0
202
#image_title

அடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 

இந்தியாவில் இன்று அதிகாலை குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மேலும் அதிகரிக்குமோ என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ரிக்டர் அளவில் 7.8 பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் உலக மக்கள் மீளாத நிலையில் அடுத்தடுத்து தொடர்நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியடைய செய்துள்ளன.

இதையடுத்து நேற்று காலை இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலோரத்தில் இருந்த ஓட்டல் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். இது ரிக்டர் அளவில் 5.2வாக பதிவானது.

அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். 

அதைப்போலவே இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று காலை  குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மீண்டும் அங்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.