சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை அம்மா உணவக பெயர்ப்பலகை திடீர் மாற்றம்!

0
73

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது, ஆனால் தேர்தலுக்கு முன்பு வரையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தில் அனேக தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் இருந்து வெற்றியும் பெற்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் அந்த கட்சியினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வெடித்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அதோடு இந்த தேடுதலில் ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி அவர்களும் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக முதன்முதலாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறார்.

இந்த நிலையில், திமுக வெற்றி பெற்று விட்டது என்ற அறிவிப்பு வெளியான அன்றே சென்னை புறநகர் பகுதியில் இருந்த ஒரு அம்மா உணவகத்தில் அந்த கட்சியினர் கலவரத்தை உண்டாக்கி அம்மா உணவகம் பெயர் பலகையை சேதப்படுத்தினார்கள். இந்த நிகழ்வு உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவந்ததன் பெயரில் அந்த பகுதிக்கு தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களை அனுப்பி அங்கு இருக்கும் நிலவரத்தை சரி செய்யுமாறும், சேதப்படுத்தப்பட்ட அம்மா உணவகம் பெயர் பலகையை உடனடியாக சரிசெய்து அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டார். அதன் பெயரில் அந்த பெயர் பலகை திருத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மதுரையில் சர்ச்சையை உண்டாக்கிய அம்மா உணவக பெயர் பலகையில் மறுபடியும் ஜெயலலிதாவின் படம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக மதுரை சுந்தரராஜ புரத்தில் இருக்கின்ற அம்மா உணவகம் பெயர் பலகையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கருணாநிதியின் புகைப்படம் இடம் பெற்று இருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகளால் பெயர்ப்பலகை திடீரென்று அகற்றப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து நீண்ட தினங்களாக பெயர்பலகை இல்லாமல் செயல்பட்டு வந்த இந்த அம்மா உணவகத்தில் மறுபடியும் ஜெயலலிதாவின் படம் மட்டும் இடம்பெற்ற பெயர்ப்பலகை அமைக்கப்பட்டு இருக்கிறது.