பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

0
230
#image_title

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் நடைபெற்று உள்ளது.

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே ஆடு, கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கேமராவில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவது,

ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட்  ஆகிய பகுதிகளில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 4 இடங்களில் உள்ள பட்டியில்  மர்ம விலங்கு ஒன்று உள் நுழைந்துள்ளது. இது அங்குள்ள 15 ஆடுகளையும், 35 கோழிகளையும்  வேட்டையாடி கொன்றது. இந்த சம்பவத்தை பார்த்த பட்டியின் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியை அடைந்தனர். ஆனால் அது என்ன விலங்கு என்று அவர்களுக்கு தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு நேரில் சென்ற வனத்துறையினர் அந்த இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களையும் அவர்கள் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அந்த மர்ம விலங்கானது இங்கு வேட்டையாடிய பழக்கத்திற்கு மீண்டும் வேட்டையாட இதே இடத்திற்கு வரலாம் என கணித்தனர்.

இதற்காக வனத்துறையினர் பெருமாள் கோவில் புதூரை சேர்ந்த சண்முகம் என்ற விவசாயின் வீட்டில் உள்ள பட்டியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினார்கள். இதையடுத்து வனத்துறையினர் நேற்று காலை கண்காணிப்பு கேமராவில் ஏதாவது பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

அங்கு இருந்த காட்சியில் சண்முகத்தின் பட்டிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1:25 மணி அளவில் மர்மம் விலங்கு ஒன்று மோப்பம் பிடித்தபடி வருவது பதிவாகியுள்ளது.

மேலும் பார்ப்பதற்கு நாய் போன்று உருவம் கொண்ட அந்த விலங்கு மூக்கும்,  வாய்ப்பகுதியும் நீண்டும், வாலும், காது பகுதியும் மேல் நோக்கி நீண்டிருந்தவாறும் காணப்பட்டது.

இது கறித்து வனத்துறையினர் கூறும்போது பார்ப்பதற்கு நாய் போன்று தோற்றம் கொண்ட அந்த மர்ம விலங்கு உண்மையில் நாய் அல்ல. அந்த மர்ம விலங்கின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அது என்ன விலங்கு என்று கண்டறியும் வரை பட்டியல் ஆடு மற்றும் கோழிகளை வளர்ப்பவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.