இந்து விரோத திமுக அரசு! இந்து மக்கள் கட்சி ஆவேசம்!

0
114

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் கூட மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை தடை விதித்திருக்கிறது. இது போன்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலான திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இந்த வருடம் தான் முதல் முறையாக நடப்பதை போன்று சில அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். சென்ற 1925 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் அடுத்த சில வருடங்களிலேயே தமிழகத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 1940 ஆம் வருடம் ஆர் எஸ் எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகத்திலிருந்து 2 பேர் பங்கேற்றார்கள். ஆர் எஸ் எஸ் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஒரு ஜனநாயக இயக்கம் 97 வருடங்களை நிறைவு செய்து 98வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வரும் இயக்கம். அரசியலமைப்புச் சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் உரிமை உள்ளது.

இந்த அடிப்படை உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் அதன் தொண்டர்கள் சீருடை அணிந்து அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்வார்கள் அணிவகுப்பு முடியும் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

அதைவிட இந்த அனுபவத்தில் எந்த விதமான கோஷமும் எழுப்ப மாட்டார்கள் இப்படி 97 வருடங்களாக நடைபெற்று வரும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் எந்த வன்முறையும் நடைபெற்றதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆர் எஸ் எஸ் அரசியல் இயக்கம் கிடையாது. சமூக, கலாச்சார, தேசபக்தி இயக்கம். நாட்டிற்காக தானாக முன்வந்து உழைக்கும் தன்னார்வலர்களை ஏற்படுத்தும் அமைப்பு.

ஆகவே தான் உயர்நீதிமன்றமும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதி வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை ஆர்எஸ்எஸ் மீறியதாக எந்த விதமான புகாரும் இதுவரையில் வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

நாட்டில் எந்த மாநிலத்திலும் ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தடை விதிக்கப்படவில்லை இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கிறார்கள். எந்த விதத்திலும் இது நியாயம் அல்ல என்று தெரிவிக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அபிமானிகள். இதுபோன்ற இடையூறுகள் மூலமாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என்று யாராவது நினைத்து கொண்டு இருந்தால் அது பகல் கனவாகவே முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஆர் எஸ் எஸ் அமைப்பை வீழ்த்த முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிவடைந்ததை இந்து விரோத தி மு க அரசுக்கு நினைவுபடுத்த விரும்புவதாக இந்து மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது எந்த நேரு ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்த்தாரோ அந்த நேருவே 1963 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சீருடையுடன் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்தார். வாஜ்பாய், நரேந்திர மோடி உள்ளிட்ட இரு பிரதமர்களை இந்தியாவிற்கு வழங்கிய இயக்கம் ஆர்எஸ்எஸ்.

இத்தகைய வரலாறு கொண்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தான். இது வேண்டுமென்றே தமிழக அரசு செய்யும் சூழ்ச்சி என்றே சொல்லலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.