உடைகிறது அதிமுக கூட்டணி! கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சி!

0
203

சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த விதத்தில் 15 வருடங்களாக அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக தீவிரம் காட்டி வருகின்றது. அதிமுக அதேவேளையில் அந்த கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் சிறிய கட்சிகளை கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. அந்த வகையில், கருணாஸ் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் திடீரென்று அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் அறிவித்திருக்கிறார் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தன்னை சசிகலாதான் அறிமுகம் செய்தார். அவர் தற்போது கட்சியில் இல்லாததால் என்னை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.ஆனால் அதிமுக சார்பாக கருணாசை கண்டுகொள்ளாததற்குக் காரணம் அவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பது தான் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் சொகுசுவிடுதியில் இருந்த சமயத்தில் அவர் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டது எல்லோருக்கும் தெரியும்.

அதனால் என் மனதில் வைத்து தான் தற்சமயம் அதிமுகவின் தலைமை கருணாசை ஒதுக்கி வைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.ஆனால் கருணாஸ் அதிமுகவின் இருக்கும் தொண்டர்களில் 75 சதவீதம் பேர் எங்களுடைய முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரிவித்திருக்கிறார். அப்படிப் பார்த்தோமானால் அந்த சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக தலைமை கருணாசை கூட்டணியில் வைத்திருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளாமல் இருப்பது அதிமுகவினராலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள்.