மீண்டும் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்தடுத்து தமிழக மக்களை கதறவிடும் வானிலை ஆய்வு மையம்!

0
67

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, இன்றைய தினம் தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டிருக்கிறது.

அதேநேரம் நாளைய தினம் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை செய்து இருக்கிறது.

இதனால் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.