அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நடக்க போகும் முக்கிய நிகழ்வு

0
59
அமெரிக்காவில் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்து வருவது கருப்பினத்தவர் மீது போலீஸ்  வெளிப்படுத்தும் வேற்றுமைதான்.  கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன
இதற்கிடையில், நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில்  விஸ்கான்சின் மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரச்சாரத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கினோஷா நகரை சேர்ந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் சந்திக்க உள்ளதாக ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தெரிவித்துள்ளது. போலீசார் துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் சந்திக்கும் நிகழ்வு அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
author avatar
Parthipan K