தமிழக அரசுக்கு பிராமணர் சங்கம் வைத்த முக்கிய கோரிக்கை! நிறைவேற்றுவாரா முதல்வர்?

0
89

தமிழக பிராமணர் சங்க 13 வது மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

மாநில பொதுச் செயலாளர் ராமநாதன் 2021- 22 காண வருட அறிக்கையை படித்தார். மாநில பொருளாளர் ஜெயராமன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கணேசன் பேசும்போது, சங்கத்தின் தேர்தலில் சந்தித்த சிக்கலான சட்டங்களை திருத்தி எதிர்காலத்தில் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதியின் தலைமையில் ஒரு குழு அமைத்து, 6 மாதகாலங்களில் அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மருத்துவர் நடராஜன், விடுதி அதிபர் பாபு, ஆடிட்டர்கள் துரைசாமி, சந்தான கிருஷ்ணன், ரங்கநாதன் உள்ளிட்டோர் சங்கத்தின் மூலமாக கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட சங்க கிளைகள், மாவட்ட தனிநபரின் சங்கப் பணியை பாராட்டும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டனர்.

மத்திய அரசின் உயர்சாதி வகுப்பில் இருப்பவர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்குவதில் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில் உடனடியாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஹிந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களில் நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

அத்துடன் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கின்ற பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் முன்னேறும் விதமாக தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.