பற்குழி பல் சொத்தை சுலபமாக குணமாக்கும் மேஜிக் முறை! 

0
252
#image_title

பற்குழி பல் சொத்தை சுலபமாக குணமாக்கும் மேஜிக் முறை! 

பல் சொத்தை பற்குழி ஆகிய எல்லாவற்றையும் தடுக்கக்கூடிய ஒரு எளிய பற்பசை தான் நாம் தற்போது வீட்டிலேயே தயாரிக்கப் போகிறோம். சாக்லேட் நொறுக்கு தீனி சாப்பிடும் குழந்தைகளுக்கு தான் சொத்தைப்பல் பல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் என்று இல்லை.

இந்த பிரச்சனைகள் பெரியவர்களுக்கும் வரும். இதற்கு காரணம் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே ஆகும். நாம் சாப்பிட்ட உணவின் மிச்சம் நம்முடைய பல் இடுக்குகளில் தங்கி நாளடைவில் நமது பற்களை சேதப்படுத்துகிறது. அதனால்தான் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது.

பற்சிதைவு என்பது நாம் பற்களை இழப்பதற்கான முதல் கட்டம் தான். இதை ஆரம்பத்தில் கவனித்து விட்டால் நாம் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதை கவனிக்காமல் விட்டால் பற்சிதைவு ஏற்பட்டு வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்தும் இது தீவிரமாகி பல்லை எடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

இந்த ஆரம்பத்திலேயே பிரச்சினையை சரி செய்யும் தற்காப்பு நடவடிக்கையை காண்போம்.

* இதற்கு முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் கிராம்பு. இது பல் சம்பந்தமான அனைத்துவித பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது. 2 கிராம்பு களை எடுத்து இதை கல்லில் போட்டு இடித்து பொடியாக்கவும்.

* அடுத்த பொருள் வேப்பிலை பொடி. இது நாட்டு மருந்து கடைகளில் தாராளமாக கிடைக்கும்.

* இடித்த கிராம்பை ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு, அதே அளவு வேப்பிலை பொடி மற்றும் மஞ்சள் பொடியை சேர்க்கவும்.

* பின்னர் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் இல்லையெனில் தேங்காய் எண்ணெயோ அல்லது ஆலிவ் எண்ணெய்யோ பயன்படுத்தலாம்.

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு பசை போல் கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு பல்துலக்கும் பிரஸ் எடுத்து அதில் தேய்த்து பல் துலக்க வேண்டும். பற்களை மென்மையாக தேய்க்க வேண்டும். பற்கள் மற்றும் ஈறுகளை மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும்.

ஒரு 2 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். உமிழ் நீரை முழுங்க கூடாது. பிறகு வாயை கொப்பளிக்க வேண்டும்.

அடுத்து ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான சுடு நீர் எடுத்துக்கொண்டு அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி வாயை கொப்பளிக்கவும். இதே போல் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பற்களைத் துலக்கி உப்பு நீரில் வாய் கொப்பளித்து வர பற்சிதைவு பல்லில் உள்ள குழிகள் அனைத்தும் குணமாகும்.

மேலும் பல் சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யும் ஒரு எளிய வைத்திய முறை இது.