பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு!

0
94
The lizard in the Pongal set was a shock! Sudden excitement in the ration shop!
The lizard in the Pongal set was a shock! Sudden excitement in the ration shop!

பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதுத் திட்டங்களை வகுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியும் வருகிறது. இருப்பினும் அதிமுக அரசு இருந்தபோது செயல்பாட்டில் இருந்த சில திட்டங்களை அடியோடு மூடி வருகிறது. சென்ற முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக பொங்கல் தொகுப்பு மற்றும்  பணம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை திமுக அரசு எந்த பணத்தையும் பரிசாக வழங்க வில்லை.

சுமார் 2.15 கோடி பேருக்கு 27 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மட்டுமே இம்முறை பொங்கலுக்கு வழங்க இருக்கின்றனர். இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசித்துவரும் போருக்கும் வழங்கப்படும் இன்று மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் பாசிப்பருப்பு நெய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் கடுகு சீரகம் மிளகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு ரவை கோதுமை உப்பு ஆகிய இருபது மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்குகின்றனர்.

அத்தோட கரும்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த 20 மளிகைப் பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு பணம் ஒதுக்கியும் அந்த மளிகை பொருட்கள் தரமற்றவை காணப்படுகிறது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு திருவள்ளூர் மாவட்டத்திலும் பொங்கல் பரிசு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள மக்கள் அனைவரும் இன்று பொங்கல் பரிசு வாங்கி சென்றனர். அவர் வாங்கிச் சென்ற தொகுப்பில் புளியுடன் சேர்த்து பல்லியும் இறந்த நிலையில் இருந்துள்ளது.

இத்தனை கோடி செலவு செய்தும் திமுக அரசால் தரமான பொருளை வழங்க முடியவில்லை. அதனால் திருத்தணி மக்கள் புளியில் பல்லி இருந்ததையடுத்து இது போல பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பொங்கல் தொகுப்பிற்கு பல்லியும் பரிசா என்று கிண்டலடித்து வருகின்றனர். யாரேனும் மக்கள் பார்க்காமல் இதை உபயோகப்படுத்தி இருந்தால் அவரின் உயிருக்கே ஆபத்தாக நேரிடும். இவ்வாறு பொங்கல் தொகுப்பு தரமற்ற இருப்பதற்கு தமிழக அரசு பதில் கூறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.