0
74
The lion girl who saved the life of the driver of the bus! Accumulate praise for the smart mind!
The lion girl who saved the life of the driver of the bus! Accumulate praise for the smart mind!

 பேருந்தை ஓட்டி டிரைவரின் உயிரை காப்பாற்றிய சிங்க பெண்! சமார்த்திய புத்தியால் குவியும் பாராட்டு!

 சுற்றுலா  செல்வதற்காக பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா செல்வதற்காக அழைத்து சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. திடீர் ஏற்ப்பட்ட மாரடைப்பு காரணமாக தடுமாற்றம் அடைந்த அவர் மயங்கி கீழே  விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை பார்த்துகொண்டிருந்த பெண் பயணி ஒருவர் பேருந்தை நிறுத்தும்படி அவரிடம் கூறினார்.ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதை கண்ட பெண் பயணிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டுனரின் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே வந்தது. பெண் பயணிகளில் ஒருவரான யோகித்தா சதவ் என்பவர் சிறிதும் அச்சம் இல்லாமல் அந்த பேருந்தை ஓட்ட தொடங்கினார். பேருந்து ஓட்டுநருக்கு உச்ச கட்ட நிலையில்   மாரடைப்பு  ஏற்பட்டது.

  இதனால் மனஉறுதியுடன் செயல்பட்ட அந்த பெண் சாமர்த்தியமாக கையாண்டு பேருந்தை செலுத்தினார்.அப்பெண்  விரைவில் டிரைவரை  மருத்துவமனையில் சேர்த்தார். இந்தப் பெண் தையரியமாக  பேருந்தை ஓட்டிச் சென்றதால், ஓட்டுநரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த  செய்தி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.பெரும்பாலானோர் அந்த பெண்ணின் வீர செயலை பாராட்டி வருகின்றார்கள்.ஒரு பேருந்தை யாராலும் அவ்வளவு எளிதாக ஓட்ட முடியாது.

பெண்கள் எவ்வளவு நன்றாக கார் ஓட்டினாலும் பேருந்து மற்றும் லாரி ஆகிய வாகனங்களை எளிதாக ஓட்டிவிடமுடியாது. அதற்காக அவர்கள் தனி பயிற்சி மற்றும் ஆறு மாத கால முன்அனுபவம் வேண்டும்.இது போன்று பெரிய வாகனங்களுக்கென தனியாக ஹெவி லைசென்ஸ் எடுக்கவேண்டும். இந்த லைசென்ஸ் ஆறு மாத கண்காணிப்பு பிறகே கொடுக்கப்படும். ஆனால் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் அந்த பெண் பேருந்தை ஓட்டியது மிகவும் பாரட்டவேண்டிய விஷயம் என்று கூறப்படுகிறது.

 

 

author avatar
Parthipan K