சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! 

0
270
#image_title

சிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! 

கிறிஸ்தவர்களின் தவக்காலமான 40 நாட்கள் சாம்பல் புதன் உடன் இன்று தொடங்கியது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அவர் 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களை இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறிக்கும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ மக்கள் வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்றுப் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கிறிஸ்துவ மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் இன்று அதிகாலையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. நாகப்பட்டினம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பேராலயத்தில்  திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் விபூதியிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.