பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது! தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!

0
53

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது முதல் பலவிதமான சிக்கல்களில் இருந்து வந்த நிலையில், அந்த சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து காட்சியை நல்ல முறையில் வழி நடத்தி வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

அதன் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவில ஏற்படுத்தப்பட்டு இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி செயல்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது அந்த கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை என்ற கருத்து எழத் தொடங்கியது. ஆகவே மீண்டும் அந்த கட்சிக்குள் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

அதேநேரம் அதிமுகவின் 90% நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆனாலும் பன்னீர்செல்வம் இன்னொரு அணியாக பிரிந்து தற்போது செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியபோது இருந்த அதே நிலையை தற்போது அவர் கையிலெடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் தரப்பில் மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானத்தின் மூலமாக அவற்றை தலைமையை கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகிறார்.

ஒற்றை தலைமை கொண்டுவந்தால் கட்சியில் பிளவு உண்டாகும், தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

ஆனால் தமிழகம் முழுவதிலும் பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் மத்தியிலும் நிர்வாகிகள் மத்தியிலும், செல்வாக்கு அதிகம் இல்லை என்பதே உண்மையான நிலவரம்.

அதிமுகவின் 90% நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதால் பொதுக்குழுவை நடத்துவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும், அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றும், பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

இதற்கு நடுவில் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பொதுக்குழு கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பொதுக்குழுவை தற்போது நடத்தாமல் போனாலும் அதிமுகவின் நிர்வாகிகளின் ஆதரவு முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை பன்னீர்செல்வம் தலைமை பொறுப்புக்கு வந்துவிட்டால் திமுகவை அவரால் சமாளிக்க முடியாது என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்து விட்டது போலும். அதன் காரணமாக தான் அவர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டாம் என்று பலரும் கருதுகிறார்கள்.

ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுக்கும் விதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையர்க்கு பன்னீர்செல்வம் மனு ஒன்றை வழங்கியிருக்க்கிறார்.

அதேபோன்ற ஒரு கடிதத்தை பொதுக்குழு நடைபெறவுள்ள திருமண மண்டப நிர்வாகிகளுக்கும் அவர் அனுப்பியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், பொதுக்குழுவை ரத்து செய்ய கடைசி ஆயுதமாக பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.