ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கிங் ஆஃப் கோதா டிரெய்லர்… இணையத்தில் வெளியாகி வைரல்!!

0
33

 

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கிங் ஆஃப் கோதா டிரெய்லர்… இணையத்தில் வெளியாகி வைரல்…

 

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது.

 

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில் நடிகர்கள் பிரசன்னா, ஷபீர் கல்லரக்கல், ஐஸ்வர்யா லெட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், அனிகா சுரேந்த்ரன், சரண் சக்தி, நைலா உஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

கிங் ஆஃப் கேதா திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான் இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். வே ஃபாரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

 

கிங் ஆஃப் கோதா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி பேன் இந்தியன் படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

கிங் ஆஃப் கோதா டிரெய்லரை பார்க்கும் பொழுது கிங் ஆஃப் கோதா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று தெரிகின்றது. டிரெய்லரை பார்க்கும் பொழுது தன் அப்பாவை போலவே தானும் பெரிய தாதாவாக ரவுடியாக வரவேண்டும் என்று நினைக்கும் ஒரு வாலிபரின் கதையாக இருக்கும் என்று தெரிகின்றது. டிரெய்லர் காட்சியில் சண்டைக் காட்சிகள் உள்ளது. மேலும் டிரெய்லரின் கடைசியில் நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் தொலைபேசியில் “நான் உன்னை பார்க்க வேண்டும் வா” என்று கூறுகிறார். மறுபுறம் வேறு ஒரு கெட்டபில் நடிகர் துல்கர் சல்மான் தொலைபேசியை எடுத்து பேசுகிறார்.

 

டிரெய்லரில் அந்த காட்சியை பார்க்கும் பொழுது கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில் ஒரு வேளை நடிகர் துல்கர் சல்மான் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கிங் ஆஃப் கோதா திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த டிரெய்லர் காட்சிகள் அதிகரித்துள்ளது.