மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!

0
130
the-issue-of-electricity-tariff-increase-the-order-of-the-supreme-court
the-issue-of-electricity-tariff-increase-the-order-of-the-supreme-court

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐக்கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவரை நியமிக்கும் முன்னரே மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

அதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து அதே நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மேல்முறையீடு செய்தது.இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தது.இதனை தொடர்ந்து மின் கட்டண உயர்வு அரசின் உத்தரவு செல்லும் என கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரியை மூன்று மாதத்துக்குள் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்சார கட்டணம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது எனவும் தெரிவித்தனர்.மேலும் உயர்வுக்கு தடை கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து நூற்பாலைகள் சங்கத்தின் தரப்பில் சட்டத்துறை அதிகாரி நியமனம் செய்யப்படும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதற்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரிகளை மூன்று மாதத்துக்குள் நியமிக்க வேண்டும் அதில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் கூறினார்கள்.மேலும் மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது.இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

author avatar
Parthipan K