சென்னை ஐஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்! இனி எந்த பயமும் தேவையில்லை புதிய ‘செல்போன் மென்பொருள்’!

0
130
the-information-released-by-the-chennai-iit-official-no-need-to-fear-any-more-new-cell-phone-software
the-information-released-by-the-chennai-iit-official-no-need-to-fear-any-more-new-cell-phone-software

சென்னை ஐஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்! இனி எந்த பயமும் தேவையில்லை புதிய ‘செல்போன் மென்பொருள்’!

சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான பிரவர்த்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பயன்பெறும் வகையில் செல்போனில் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருளுக்கு பார் ஓஎஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.பயனாளிகள் ரகசிய தகவல் தொடர்புகள் தேவைப்படும் சமயத்தில் முக்கிய தகவல்களை இதன் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி தனி உரிமை, பாதுகாப்பு தேவைகளை கொண்ட நிறுவனங்களுக்கும் தற்போது இந்த மென்பொருள் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் பயனாளிகள் தனியார் 5ஜி நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறுகையில் நமது நாட்டில் பார் ஓஎஸ் மென்பொருளை ஏற்றுக் கொள்ளவும் பயன்பாட்டை அதிகரிக்கவும் மேலும் பல தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்றவைகளுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற சென்னை ஐஐடி ஆர்வம் கொண்டுள்ளது. அதனால் இந்த மென்பொருளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K