மகிழ்ச்சியுடன் தொடரை விட்டு வெளியேறிய இந்திய அணி!

0
56

நமீபியாவிடம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றது சூப்பர் 12 சுற்றில் இந்தியா இரண்டாவது பிரிவில் இடம் பெற்றிருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தான் இடமும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடமும், தோல்வியை சந்தித்ததால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கைநழுவியது.

இந்த நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியாவை சந்தித்தது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் சார்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேபோல்  பும்ப்ரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தது அதன் மூலமாக அதிகாரப்பூர்வமாக இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது என சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தனது ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, உள்ளிட்டோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இரண்டு பேருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

ரோகித் சர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.  ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்தது. ராகுலுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார் இந்த ஜோடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றது.

கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 4 பவுண்டரி 2 பிக்சர் 54 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதேபோல சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுக்க இந்திய அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

ஐந்து லீக் ஆட்டங்களில் கடைசி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.