மாறாத வடுவாக மனதை உருக்கிய சம்பவம்…! மிகுந்த சோகத்தில் அமைச்சர்…!

0
69

சென்ற வருடம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்து போன சின்ஸ் முதலாம் வருட நினைவு தின நாளை முன்னிட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அழுத்தமான பதிவை தனது வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.மணப்பாறை அருகே இருக்கும் நாடுகட்டுப்பாட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் சுமார் 88 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து சுஜித்தின் தாய் மற்றும் தகப்பனார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து சென்றார்கள்

திமுக ஸ்டாலின் தலைவர் அவர்கள் சிறுவன் சுஜித் இறந்த அன்றைய தினமே சுமார் 5 லட்சம் நிதி உதவி வழங்கினார் இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறுவன் சுஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி பின்பு பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சமும் அதிமுக சார்பாக சுமார் 10 லட்சம் நிதியாக வழங்கினார்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வலைதள பக்கத்தில் சுஜித் மீண்டு வருவார் என கோடான கோடி பிரார்த்தனைகள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டு மறைந்துபோன கருப்பு தினம் இது உறக்கமின்றி உனக்காக உறுதியுடன் காத்திருந்த எங்களை தண்ணீரில் மூழ்கடித்து நீ மறைந்து போனது மாறாத சோகமாய் மனதில் இருக்கின்றது மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம் என குறிப்பிட்டு இருக்கின்றார்.