உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

0
82
the-incident-at-the-restaurant-the-staff-put-acid-instead-of-water-2-children-are-worried
the-incident-at-the-restaurant-the-staff-put-acid-instead-of-water-2-children-are-worried

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

பாகிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி முஹம்மது அடில் என்பவர் அவருடைய குடுபத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பொயட் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் முகமது அடிலின் இரண்டரை வயது குழந்தை தண்ணீர் என நினைத்து ஆசிட்டை பருகியுள்ளார்.அதனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த விழாவிற்கு வந்த அடில்லின் உறவுக்கார சிறுவன் தண்ணீர் என நினைத்து ஆசிட்டால் கை கழுவியுள்ளார்.அதனால் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முஹம்மது அடில் போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உணவக மேலாளர் மற்றும் அங்கு பணிப்புரியும் ஐந்து ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை!

author avatar
Parthipan K