Connect with us

Breaking News

எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்! 

Published

on

எப்போதும் குடிபோதையில் இருந்த கணவர்! குழந்தைகளுடன் மனைவி செய்த அதிர்ச்சி செயல்! 

கணவர் குடிபோதைக்கு அடிமையான தால் 2 குழந்தைகளுடன் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.  இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுரேஷ் எப்போதும் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சுரேஷுக்கும், அம்முவிற்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.  இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சண்டை நடந்து வந்துள்ளது.

Advertisement

இதனால்,  கடும் மனமுடைந்த அம்மு, தனது மகள், மற்றும் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதையடுத்து கல்லாவி ரயில் தண்டவாளத்தில் 3 பேரின் சடலங்களை கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுப்பற்றிய தகவல் அறிந்த கல்லாவி போலீசாரும், ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  கணவரின் குடி போதை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா, மகன், மகள்,3 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

 

 

Advertisement