இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 

0
123
#image_title

இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!!

2024 ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவ இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வரும் ஜனவரியில் ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ செய்து வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (நாசா) இணைந்து, சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைக்கோளை அடுத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளன.

இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டே, இஸ்ரோ மற்றும் நாசா இடையே திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்கான சோதனை 2020ல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த சோதனையை மேற்கொள்ள நடவடிக்கைகள் தீவிரமாக வருகின்றன.

அதன்படி அடுத்தாண்டு ஜனவரியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட்டில் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தங்களை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த செயற்கைக்கோள் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட்-1 (எல்-1)ல் செயற்கைக்கோளை செலுத்த 177 நாட்கள் ஆகும்.

அங்கிருந்து, சூரியனில் ஏற்படும் மாற்றங்களை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் ஆறு பேலோடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

‘ஆதித்யா-எல்1’ செயற்கை கோள் மூலம், சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க முடியும்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள சோலார் அப்சர்வேட்டரி மூலம் உருவாக்கப்பட்ட உயர் ஆற்றல் L-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (HEL1OS) ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஹீலியோஸ் என்பது அடுத்த தலைமுறை ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும், இது சூரியன் மாறும் நிகழ்வுகளை கண்காணிக்கும். ஆதித்யா-எல்1 மிஷன் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகவும் கனவு திட்டமாகும்.

சூரியனை ஆராயும் இந்தியாவின் முதல் பணி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான்-1, சந்திரயான்-2 மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான்-1 ஆகிய மூன்று செயற்கை கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

அடுத்தாண்டு ஜனவரியில் ஆதித்யா எல்1 என்ற செயற்கைக்கோள் சூரியனை நோக்கி விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Savitha