யாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது! பாமக நிறுவனர் வேதனை!

0
43

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடிப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதைப் பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா சம்பந்தமாக ஒரே நாளில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவுசெய்ய இயலும் ஆனாலும் முதன்முறையாக இதற்கான பரிந்துரை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது சுமார் நான்கு மாத காலமாக நிலுவையில் இருக்கும் அந்த சட்ட மசோதா குறித்து இன்றுவரை ஆலோசனை நடத்தாமல் இருப்பதை நம்ப முடியவில்லை.

அரசாங்க பள்ளிகளில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வந்துவிட கூடாது என்கின்ற எண்ணமும் ஆளுநருக்கு எங்கிருந்தோ கொடுக்கப்படும் அழுத்தமும் தான் இந்த கால தாமதத்திற்கு காரணமாக இருக்க முடியும்.

மருத்துவக் கல்லூரிகளில் அரசினர் பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க மேலும் மூன்று வாரங்கள் செல்லும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளி வருகின்றனர் அது உண்மை என்றால் இது காலம் தாழ்த்துவதற்கான முயற்சிதான்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதியில் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று எம் சி ஐ ஆணை பிறப்பித்தால் மாணவர்களின் சேர்க்கையை துரிதமாக தொடங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எழுவதற்கான சூழ்நிலை உருவாகும் இல்லையென்றால் அழுத்தம் கொடுக்கப்படும் அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதைத்தான் ஒருசிலர் விரும்புகிறார்களோ?

அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமானால் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு முழுவதுமாக கைவிடப்படும் என்று நினைத்தாலே பாவம் அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு இடம் தராமல் ஆளுநர் உடனடியாக இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.