தமிழக அரசே எங்களை சார்ந்து தான் இருக்கிறது! மத்திய அமைச்சர் அதிரடி!

0
77

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசின் திட்டம் தான் என்று திருடினாலும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பாக விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த விழாவில் பேசியதாவது, நாடு முன்னேற வேண்டுமென்றால் விவசாயமும் விவசாயிகளும் முன்னேற வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது விவசாயிகள் வாழ்வாதாரம் அளித்தவற்றை காப்பதற்காக அவருடைய வங்கி கணக்கில் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 11 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது. தென்னை விவசாயம், முன்னேற்றம், தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்போம், குழுக்கள் அமைப்பது, ஏற்றுமதி பிரச்சனைகள், நிதி வழங்குவது உட்பட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.

மத்திய அரசின் பல திட்டங்களுக்கு தமிழகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அவர்களுடைய திட்டங்களாக திருட முற்படுகிறார்கள் என்னதான் திருட முயற்சி செய்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி என்ற மாபெரும் சக்தியை யாராலும் அழிக்க இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை மாவட்ட தலைவர்கள் வசந்த ராஜன் மோகன் மந்தராசலம் நல்லசாமி உட்பட பலர் பங்கேற்றார்கள்.

பொள்ளாச்சியில் நேற்று பாஜகவின் மாநிலத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது இனம் மதம் மொழி இவற்றுக்கான கட்சி பாஜக அல்ல பாஜக தேசியத்திற்கான கட்சியாக திகழ்ந்து வருகிறது. ஏழைகள், கிராம மக்கள், உழவர்களுக்காக இந்த கட்சி செயல்பட்டு வருகிறது.

பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் இதற்கு நிர்வாகிகளின் ஒத்துழைப்பு மற்றும் அன்பு உள்ளிட்டவை அவசியம் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவை சார்ந்ததாகவும் நம்முடைய நல்ல எண்ணங்களை சார்ந்ததாகவும் மாறி உள்ளதை காண முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.