தமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி…! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…!

0
64

நீட் நுழைவுத் தேர்வில் சம்பந்தமாக தமிழக மாணவர்கள் மிக விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியினை கேட்பார்கள் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கின்றார்.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்தித்து வருகின்றது அதோடு இளங்கலை மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தரும் சட்டமசோதா இப்போது ஆளுநர் அவர்களின் பரிசீலனையில் இருக்கின்றது இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை இது சம்பந்தமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கின்றார் அதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக விரைவில் மகிழ்ச்சி அடையும் ஒரு செய்தி வரும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி அடைந்தவர்கள் பணி வாய்ப்பை பெறுவதற்கு வயது வரம்பு ஒரு தடை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.