கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

0
62

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி பெங்களூர் மாநிலம், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் போல இரண்டு நபர்களை வரவழைத்துள்ளார். மேலும், அந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நோய் முற்றியதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அப்படி யாரும் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

கணவன் மற்றும் சகோதரர்கள் அந்தப் பெண்ணை காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.மேலும் அந்தப் பெண்ணை விரைவில் கண்டுபிடிக்கும் வகையில், செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, தனது புகைப்படத்தை செய்தித்தாளில் கண்ட அந்தப் பெண் உடனே காவல் ஆய்வாளருக்கு தொடர்பு கொண்டு, தான் காணாமல் போகவில்லை என்றும், வீட்டை விட்டு வெளியேறுவதற்காக தானே இரண்டு நபர்களை நாடகமாடி அழைத்துச் செல்லும்படி கூறியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும் தனது கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து செல்ல இப்படி செய்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.மேலும், கணவரிடம் செல்ல விருப்பமில்லை என்றும் அந்தப் பெண் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K