100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?

0
68

கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு இந்தியன் வங்கியில் சென்னை துறைமுகத்தின் பெயரில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது,பணம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை துறைமுகத்தின் இணை இயக்குனர் என்று கணேஷ் நாடார் என்பவர் கோயம்பேடு வங்கியில் அறிமுகமாகி இந்த 100 கோடி ரூபாய் டெபாசிட் பற்றிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர்.பிறகு இந்த 100 கோடி ரூபாய் பணத்தை 50,50 கோடி ரூபாயாக இரண்டு வங்கி கணக்கில் போடவேண்டும் என்று கூறி வங்கி கணக்கை மாற்றியுள்ளார்.இவ்வாறு இரண்டு வங்கி கணக்குகளுக்கு பணமானது மாற்றம் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து இந்த பணங்கள் வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருந்தது.இதற்கு அந்த வங்கியின் மேலாளர்
சேர்மதி ராஜா என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார். இவருக்கு கூடுதலாக, கணேஷ் நடராஜன், மணிமொழி என்ற நபர்களும் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

அதே கோயம்பேடு இந்தியன் வங்கிருக்கு மூன்றாவதாக செல்வகுமார் என்ற நபர் சென்னை துறைமுகத்தின் பெயரில் கணக்கு தொடங்க வந்துள்ளார்.அப்பொழுதுதான் அங்கு உள்ள மற்ற சில அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில்,வங்கி அதிகாரிகளால் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இது சென்னை துறைமுகம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதாலும், வங்கி மோசடி விவகாரம் என்பதாலும் இந்த வழக்கினை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் போலியான நபர்கள் கணேஷ் நடராஜன், மணிமொழி மற்றும் சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கின்றது.
இதில் நூறு கோடி ரூபாய் பணத்தில் 45 கோடி ரூபாய் பணமானது வேவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.இந்த விசாரணையின் அடிப்படையில்
100 கோடி ரூபாய் பணத்தில் இந்த 45 கோடி ரூபாய் பணம் யார் யாருக்கெல்லாம் சென்றிருக்கிறது? எவ்வாறு சென்றிருக்கிறது? இந்த விவகாரத்தில் சென்னை துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா?என்ற கோணத்தில் சிபிஐ தனது விசாரணையை தீவிரமாகி உள்ளது.

author avatar
Pavithra