தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூடுகிறது இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்!

0
70

இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்றைய தினம் நடக்கவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கக்கூடிய கலைவாணர் அரங்கத்தில் தான் மறுபடியும் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

காலை சுமார் 11 மணி அளவில் இந்தக் கூட்டம் ஆரம்பிக்கிறது வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நிகழ்த்தும் உரையில் மக்களுக்கு கவர்ச்சியான திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் பேரறிவாளன் விடுதலை மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எதிர்கட்சியான திமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இதற்கிடையே தமிழக ஆளுநரின் இன்றைய சட்டசபைக் கூட்டம் நிறைவுறும். அதன் பிறகு சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அதில் எத்தனை தினம் இந்த சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்று முடிவு செய்து, சட்டசபை கூட்டத்தின்போது அறிவிப்பார் என்று தெரிகிறது.

அதேபோல இந்த சட்டசபை கூட்டமானது மூன்று அல்லது நான்கு தினங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் 22ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.