Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

0
84

காலனி தயாரிப்பதில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களில் இந்த பாட்டா  நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 126 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களிடத்தில் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிறுவனமும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முக்கிய நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு இந்தியரை நியமித்து உள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் குளோபல் சிஇஓ பதவிக்கு ஒரு இந்தியரை நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும். சந்தீப் கட்டாரியா என்பவர் இந்த பாட்டா நிறுவனத்தில் இந்தியாவின் சிஇஓ பதவியில் பணிபுரிந்து வந்தார். இவரின் வயது 49 ஆகும். 

இவரே குளோபல் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டெல்லி IIT பட்டதாரி ஆவார். மேலும் இவர் யுனிலிவர், வோடாபோன் போன்ற பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் இவர் 24 ஆண்டுகள் இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் ஆவார்.

2017 ஆம் ஆண்டு பாட்டா நிறுவனத்தில் இந்தியாவின் சிஇஓ ஆக சந்தீப் கட்டாரியா பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இவர் சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால்  இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாம். தற்போது இவரே குளோபல் சிஇஓ பதவிக்கு உயர்ந்தார்.

author avatar
Parthipan K