இந்தியாவில் அதிவேகமாக பரவும் புதிய வகை நோய் தொற்று!

0
92

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை நோய் தொற்று தற்சமயம் உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது அது பரவிவிட்டது மற்ற வகை நோய் தொற்றுகளை விடவும் இந்த புதிய வகை நோய் தொற்று அதிவேகமாகப் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்ற காரணத்தால், அதிக பாதிப்புகளை உண்டாக்க கூடும் என்று கருதி இந்தியாவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் இந்தியாவில் தினசரி புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை அன்று இரவு வரையில் இந்தியாவில் 40 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் தற்சமயம் வரையில் 61 பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையில் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு இந்த புதிய நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரையில் 17 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. டெல்லியில் 6 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும், ஆந்திரப் பிரதேசம். சண்டிகர் மற்றும் கேரளாவில் தலா ஒரு நபர்களுக்கும் இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மராட்டியத்தில் மும்பையில் லண்டன் சென்று திரும்பிய ஒருவருடன் தொடர்பு இருந்ததால் 8 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நோய் பாதிக்கப்பட்டவர்கள் 3 பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் இரண்டு டோஸ் நோய்தொற்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர் என்பது தெரியவந்திருக்கிறது.