உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

0
89
#image_title

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் – தர்மபுரி நெடுஞ்சாலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குள்ளையன்(75), இவரது மனைவி முனியம்மாள்(68), இவர்களுக்கு முனியப்பன்(50), சின்னசாமி(47) இரண்டு மகன்களும், ஜம்பேரி(52) என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களது தாய் முனியம்மாள் பெயரில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது.

இந்த நிலத்தை தனது இளைய மகன் சின்னசாமி பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக அவரது மூத்த மகன் முனியப்பன் மற்றும் அவரது அக்கா ஜம்பேரி இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று முனியப்பன் தன் அனுபவத்தில் உள்ள நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பெயரில் சிட்டா மாற்றி விட்டார் என கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கிரிட் கார்ப்ரேசனுக்கு எதிரில் உள்ள உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக ஏறியுள்ளார்.

தகவல் அறிந்த வந்த இண்டூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பன் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் தீயணைப்புத் துறையினர் சுமார் 200 அடி உயரத்திற்கு கயிறு கட்டி மேலே ஏறி முனியப்பனை பத்திரமாக இறக்கினர்.

சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிறகு மேலே இருந்து கீழே இறங்கி முனியப்பனை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Savitha