ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!!

0
111
#image_title

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்தா வீசிய இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானா முதல் முறையாக இலங்கை ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரானா சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் இந்த ஆண்டு தனது சிறப்பான பந்துவீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார். குறிப்பாக இவரது பந்துவீசும் ஸ்டைல் இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லாசித் மலிங்கா அவர்களின் ஸ்டைல் போல இருக்கும். அதனால் மதீஷா பதிரானவை அனைவரும் ஜூனியர் மலிங்கா என்று அழைக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மே 29ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மதீஷா பதிரானா 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து இவர் முதல் முறையாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் மதீஷா பதிரானா இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. அதில் மதீஷா பதிரானா அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடருக்கு எதிராக விளையாடும் இலங்கை அணி…

தசன் ஷானகா(கேப்டன்), குசால் மெண்டிஸ், பதும் நிஷாங்கா, துமுத் கருணரத்னே, அஞ்சலோ மேத்யூஸ், சரிதா அசலங்கா, தனஞ்செயா டிசில்வா, சதீரா சமரவிக்ரமா, மகீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, துஷன் ஹேமந்தா, சமிகா கருணரத்னே, மதீஷா பதிரானா, துஷ்மந்த் சமீரா, லஹிரு குமாரா, குசன் ரஜிதா.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளும் ஹம்பன்டோட்டாவில் உள்ள மஹிந்தா ராஜபக்சா இன்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இரண்டு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜூன் 4ம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜூன் 7ம் தேதி நடைபெறுகிறது.