மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

0
115
The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!
The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் வேலையில் தற்போது தமிழக அரசும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

நாங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதே கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறியுள்ளனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் விசைத்தறியாளர்கள், பலர் மின் கட்டணத்தை ரத்து செய்யும்படி போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மின்கட்டணத்தை ரத்து செய்யும்படி வரும் 27ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவோடு போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தறி தொழில் செய்பவர்களுக்கு கொரோனா ஆரம்பத்திலிருந்து நஷ்டம் தான். ஜிஎஸ்டி உயர்வால், நூல் விளையும் உயர்ந்தது. இதனால் ஆங்காங்கே விசைத்தறி தொழிலில் முடக்கம் ஏற்பட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மின்கட்டணத்தையும் தற்போது தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனை சாமானிய மக்கள் எவ்வாறு எதிர்கொள்வர். எனவே மின்கட்டணத்தை ரத்து செய்யும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.