போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

0
110
#image_title

போக்குவரத்து காவலர் மீது கார் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற அவலம்!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை காரின் போனட் மீது ஏற்றியதோடு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச் சென்ற பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அந்த காவலரின் பெயர் ஹர்தீப் சிங் என்பதும் காரில் இழுத்துச் செல்லப்பட்டதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுனரின் பெயர் முகல் மோது என்பதும் சம்பவம் நடந்த அன்று தனது நண்பர் மோனு உடன் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

காரின் ஓட்டுனர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று லூதியானாவின் மாதா ராணி செளக் பகுதியில் பணியில் இருந்த போது காரை நிறுத்துமாறு போக்குவரத்து காவலர் ஹர்தீப் சிங் சமிக்ஞ்சை சைகை செய்த போது காரை நிறுத்தாத ஓட்டுனர் காரை போக்குவரத்து காவல்ரின் மீது ஏற்ற முயற்சித்ததாகவும் இதனால் தடுமாறி காரின் போனட் மீது விழுந்ததாகவும் போக்குவரத்து காவலர் ஹர்தீப் தெரிவித்துள்ளார்.

காரை ஓட்டி வந்த முகல் மற்றும் மோனு மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
Savitha