100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

0
64

தன்னிடம் வரும் நோயாளிகளை கொலை செய்து அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு உடல்களை ஏரியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார் மருத்துவர் ஒருவர்.

 

 

டெல்லியை சேர்ந்த தேவேந்திர குமார் ஷர்மா, 62 வயதான இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கிட்னியை திருடிவிட்டதாக 1994 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைதானார். ஆனால் அவர் சில வருடங்களிலேயே விடுதலைபெற்று வெளியில் வந்துவிட்டார்.

 

 

பிறகு 2003 ஆம் ஆண்டுகளில் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏராளமான வாகன ஓட்டுனர்கள் காணாமல் போயினர்.

 

இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், ஓட்டுநர்களை கடத்தி கொன்றது தேவேந்திர குமார் ஷர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் என விசாரணையில் தெரியவந்தது.

 

பிறகு, கைதுசெய்யப்பட்ட அவர்களை விசாரிக்கும் போது 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களை கொலை செய்திருப்பதாகவும், அவர்களின் வாகனங்களை விற்று பணம் சம்பாதித்ததாகவும் தேவேந்திர குமார் ஒப்புக்கொண்டார்.

 

மேலும் கொலை செய்யப்பட்ட ஓட்டுநர்களின் உடல்களை உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹசாரா ஏரியில் வீசியதாகவும் கூறினார். போலீசார் உடல்களை தேடியபோது எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில், அந்த ஏரியில் முதலைகள் அதிகம் என்பதால் அவர்களின் உடல்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

 

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனடிப்படையில் தேவேந்திர குமார் சர்மாவிற்கு 2004 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

 

உத்திரபிரதேசத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் 16 ஆண்டுகள் கழித்து வார கால பரோலில் வெளியே வந்தார். பரோலில் அவர் வெளிவந்து அதன் காலம் முடிந்த பிறகும் அந்தக் கொடூரன் சிறைக்கு திரும்பவில்லை.

 

இதனால் போலீசார் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, தெற்கு டெல்லியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரை கைது செய்து திரும்பவும் சிறையில் அடைத்தனர்.

author avatar
Parthipan K