பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக் கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

0
60

பிரபலம் ஆகலாம் என பேசி வம்பில் மாட்டிக்கொண்ட பிரசன்னா பதவியை பறிக்க திமுக தலைமை முடிவு

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர்களின் அடுக்கு மொழி நடையில் அமைந்த பேச்சுதான். பெரியாரின் இரண்டாம் திருமணத்தால் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கிய அண்ணா அவர்கள் தனது வீசீகரமான பேச்சாற்றலலாலே மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தவர்.

பல நேரங்களில் அவரது பேச்சு பாமர மக்களுக்கு புரியாத போதும் அவரது பேச்சு நடையை மட்டுமே ரசித்து கேட்டதும் உண்டு. அவர் வழி வந்த கருணாநிதி அவர்களும் தனது பேச்சாற்றலாலே வளர்ந்தவர். இவ்வாறு திராவிட இயக்கம் என்றால் அவர்களின் முக்கிய அடையாளமே பேச்சு தான். இதே பாணியில் இடையில் வந்த தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் போன்றவர்களின் பேச்சு மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் அன்றைக்கு சமூக ஊடகங்களின் வளர்ச்சி இல்லாததால் அவர்களின் கீழ்ந்தரமான பேச்சு மக்தளிடையே செல்லவில்லை.

அதே பாணியில் இன்றைக்கு பேசி வருபவர் திமுகவின் செய்தித் தொடர்பாளர் பிரசன்னா உணர்ச்சி பொங்க எதிர் கட்சிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடும் பிரசன்னாவின் பேச்சுக்களை இன்றைக்கு சமூக ஊடகங்களில் திமுகவிற்கு பெரும் இழப்பாக திமுக தலைமைக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பலமுறை தலைமையால் எச்சரிக்கப்பட்ட பிரசன்னா தற்போது ஜமாத்திடம் 50000 பெற்றுக்கொண்டு சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பேசியது தெரியவந்துள்ளதால் கடும் கோபம் கொண்டு இந்த பிரச்சனையை துரைமுருகன் அவர்களிடம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். அவரும் தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கி உள்ளார்.

எப்பாடியாவது மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமாகி கட்சியில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிட வேண்டும் என்று எணிணிய
பிரசன்னாவுக்கு தற்போது செய்தித் தொடர்பாளர் பதவியும் பறிபோகும் நிலை வந்துள்ளதால் மிகுந்த கலக்கத்தில் உள்ளாராம்.

author avatar
Parthipan K