பாட்டாளியே… உன்னைப் பார்க்காத நாளெல்லாம் வெறுமைப் பொழுதாய் கழிகின்றனவே!” பாட்டாளிகளுக்கு மருத்துவர் ராமதாஸின் உருக்கமான மடல்

0
68

பாட்டாளியே… உன்னைப் பார்க்காத நாளெல்லாம் வெறுமைப் பொழுதாய் கழிகின்றனவே!” பாட்டாளிகளுக்கு மருத்துவர் ராமதாஸின் உருக்கமான மடல்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முப்பது வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து அன்றாடம் மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருபவர் அவர் கொரோனோ காரணமாக யாரையும் சந்திக்காமல் இருப்பது சற்று கடினமான காலமாக உணர்வதாக பதிவிட்டுள்ளார்.

அவர் கடந்த மாதம் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளான காளிதாஸ் மற்றும் எதிரொலிமணியன் ஆகியோரது திருமண நிகழ்வில் கலந்துகொண்டதையும் அவரது மகள்வழி பெயர்த்திக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களது மகளுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட நிகழ்வையும் பகிர்ந்துள்ளார்.

நேரடியாக பார்க்காவிட்டாலும் யார் யாரெல்லாம் தன்னை தொடர்பு கொண்டு பேசினார்களோ அவர்களையும் நினைவுகூர்ந்துள்ளார் அவரது பதிவில். சென்னையில் உள்ள தன்னைடைய பெயரனை பார்க்காமல் இருப்பது தனக்கு மிகுந்த சிரமமாக உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மார்ச் 20-ஆம் தேதி தன்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு குறித்தும் ஒரு மருத்துவர் என்ற முறையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாவும் பதிவிட்டுள்ளார்.

உங்களுக்கும், எனக்கும் இடையிலான அனைத்து தடைகளும் தற்காலிகமானவையே என்றும்
கொரோனா வைரஸ் நோய் விரைவில் ஒழிக்கப்படும். அப்போது தைலாபுரம் தோட்டத்தின் கதவுகள் மீண்டும் திறக்கப்படும். அப்போது உங்களின் திருமுகங்களைக் காண்பேன். அந்த நாளை எதிர்நோக்கித் தான் நான் காத்திருக்கிறேன் என்றும் கூறியுளாளார்.

எப்போதும் மருத்துவர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கூறும் அறிவுரை முதலில் குடும்பத்தை பாருங்கள் பிறகு தான் மற்றவையெல்லாம் என்பதே அந்தவகையில் இந்த பதிவிலும்
” உங்கள் மனைவி, மக்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழியுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். ஒரு முறை கடைக்கு சென்றால், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வந்து விடுங்கள். அதற்காக வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்லுங்கள். அதேபோல், 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகளையும் முகக்கவசம் அணிந்து சென்று வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் தனிமைப் படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு திருக்குறளை கற்றுத் தாருங்கள்.
என்றும் ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் போல தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

author avatar
Parthipan K