பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

0
105
The daughter who saw the beauty after marrying the birth mother!
The daughter who saw the beauty after marrying the birth mother!

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

 கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்தனை செய்தார்.

அந்த சிந்தனையில் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று ஒரு முடிவுடன் இருந்தார்.அதற்காக தனது தாய்க்கு தகுந்த மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்.அந்த சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் தான் திவாகரன் அவருடைய வயது 63. மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

தனது தாய்க்கு ஏற்ற துணை இவர்தான் என்று பிரசிதா முடிவு செய்தார். இரண்டு மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார்.அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும் அவருக்கு ஒரு துணை வேண்டும் அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று கூறினார்.

பல மணி நேரம் மனம் உருகி பேசினார். இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2 ஆவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது இரண்டு பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

எங்களுக்கு முழு சம்மதம் என்றார்கள். இதை தொடர்ந்து தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார்கள்.அதன்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தாய்க்கு 2ஆவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா மகிழ்ச்சியில் அதைப்பற்றி கூறியதாவது,எனது அம்மாவுக்கு நாங்கள் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் தான். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.இப்போது நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது இவ்வாறு அவர் கூறினார்.

இதனை கண்ட அனைவரும் கண்கலங்கி பார்த்து ரசித்து இருந்தனர். இப்படி பட்ட பெண் பிள்ளைகள் இருக்கையில் தாய்க்கு எதற்க்கு கஷ்டம் வரும்.இப்போது பிள்ளைகளுக்கு இவர்களும் ஒரு குழந்தை தானே.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

author avatar
Parthipan K