Connect with us

Crime

செல்லமாக வளர்த்த மகள் செய்த காரியத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!

Published

on

சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சார்ந்த ஐயப்பன் என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணமாகி சீதா என்ற மனைவியும், 2 மகள்களும்,1 மகனும் இருக்கிறார்கள்.

சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கின்ற அரசு மேல்நிலைபள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் இவருடைய இளைய மகள் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற சூழ்நிலையில், வீட்டிற்கு திரும்பி வரவில்லை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ராஜமங்கலம் காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது.

Advertisement

இந்த சூழ்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் மாயமான மாணவி வில்லிவாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான குமார் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்திருக்கிறது. இதற்கிடையில் காதலன் குமாருடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை தன்னுடைய தந்தை ஐயப்பன் கைபேசிக்கு மாணவி அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து மகள் காதலனுடன் ஓடி சென்றதன் காரணமாக, அவமானம் தாங்க இயலாமல் மனவேதனை அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி சீதா உடனடியாக ராஜமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஐயப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதேபோன்று சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்த அபிராமி என்பவருக்கு கடந்த 23ஆம் தேதி ஏசி மெக்கானிக்கான சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று அபிராமி தன்னுடைய உறவினர் வீட்டு விருந்துக்கு வந்த சூழ்நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஓட்டேரி காவல் துறையைச்சார்ந்தவர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement